25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


உலகில், 87 லட்சம் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் அபூர்வ விலங்குகள். ஜெர்போவா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகில், 87 லட்சம் உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் அபூர்வ விலங்குகள். ஜெர்போவா.

மயில் சிலந்தி: இதன்வயிற்றுப் பகுதி வண்ணங்களால் நிரம்பி இருக்கும். ஆஸ்திரேலியாவில் காணப்படுகிறது. அண்டை நாடான சீனாவிலும் இருக்கிறது. வேகமாக அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஜெர்போவா: பாலைவனப் பகுதியில்காணப்படுகிறது. நீண்ட காதுகளை உடையது. கங்காரு போல் கால்கள் உடையது. மணிக்கு, 24 கி.மீ., வேகத்தில் ஓடும். இதற்கு கேட்கும் திறன் அதிகம். ஆறு ஆண்டுகள் வரை வாழும். மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.

ஆஸ்ட்ரோகோட்ஸ்: ஒரு வித கடல்வாழ் உயிரினம். 30 மி.மீ., வரை வளரக் கூடியது. உடல் அளவோடு ஒப்பிடும் போது, அதிக விந்தணுவை உற்பத்தி செய்யும் திறன் உடையது.உலகின் வேறெந்த உயிரினத்திற்கும், இத்தகைய திறன் கிடையாது.

கோபிளின் சுறா: ஆழ் கடல்பகுதியில் மட்டுமே வசிக்கும் அரிய வகை இனம். நான்கு மீட்டர் வரை வளரக் கூடியது. பிங்க்நிறத்தில் இருக்கும். இதன் தோல் தாடை பகுதிக்கு மேலே நீட்டியபடி இருக்கும். வினோத மூக்குப் பகுதி இந்த உயிரினத்ன வேறுபடுத்தி காட்டும்.

ஆக்ஸலோடிஸ்: வட அமெரிக்க நாடானமெக்சிகோவில் உள்ளது. இதிலிருந்து உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது பார்ப்பதற்கு சாலமாண்டர் போல இருக்கும். இதை, நடக்கும் மீன் என்று அழைப்பர்.இதன் ஆயுளில் அதிக காலம்  இளமை பருவமாகவே கழிகிறது.

ஜியோடக்ஸ்: அதிக ஆயுட்காலம்உடைய உயிரினங்களில் ஒன்று.கிராபிக்ஸ் படங்கள் போல இருக்கும். வட அமெரிக்க நாடான கனடாவின் மேற்கு பகுதியில் அதிகம் உள்ளது. அதிகபட்சமாக, 20 செ.மீ., வரை வளரும். இது, 140 ஆண்டுகள் வரை வாழக் கூடியது. சில, 168 ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

டப்டட் மான்:

குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே வசிக்கும் உயிரினம். அண்டை நாடான மியான்மர் மற்றும் மத்திய சீனப் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. பெரும்பாலும், ஜோடியாகவே காட்டில் உலவித் திரியும். மிகவும் அழகு வாய்ந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News